எம்.எச்.எம். அஷ்ரப் எம்மை விட்டு மறைந்த 14ஆவது நினைவு தினத்தில் இந் நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு, ஓரணியில் திரள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்  நினைவாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள செய்தி  

       உரிமைகளை இழந்து சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் துறைகளில் முற்றாகப்  புறக்கணிக்கப்பட்டு, அரசியல் அநாதைகளாக பரிதவித்த இலங்கை முஸ்லிம்களை அரசியல் மயப்படுத்துவதற்காக இந் நாட்டு முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்றுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை ஸ்தாபித்ததன் ஊடாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனைக்கு வழிகோலிய பெருந் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்  எம்மை விட்டு மறைந்த 14ஆவது நினைவு தினத்தில் இந் நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு, ஓரணியில் திரள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும். நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் ஸ்தாபகத் தலைவரும். முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 14ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்த எமது பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் எங்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கின்ற போதிலும், அவர்களின் பிறந்த நாளையும், மறைந்த நாளையும்  தொடர்புபடுத்தி ஆண்டு தோறும் ஒரு மாத காலமாக அன்னாரை நினைவு கூரும் வழக்கத்தை எமது கட்சி பிரகடனப்படுத்தியிருக்கிறது.

இந்தக் காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊற்றுக் கண்ணான கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது, நாடளாவிய ரீதியில் எமது மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவாக பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அவற்றில் அன்னாரின் பாசறையில் வளர்ந்த கட்சிப் போராளிகளும், ஆதரவாளர்களும் அனுதாபிகளும், பொதுமக்களும் மிகவும் ஆர்வமாகப்  பங்கேற்று வருகின்றனர்.

உள்நாட்டிலும், உலக நாடுகளிலும் முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற இந்த இக்கட்டான காலகட்டத்தில், மறைந்த எமது பெருந் தலைவரை மிகவும் நன்றியறிதலோடு நினைவு கூரும் சந்தர்ப்பத்தில், திருக்குர்ஆனினதும், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களினதும் போதனைகளின் அடிப்படையில் அன்னாரால் புடம் போடப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள இந் நாட்டு முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவது காலத்தின் இன்றியமையாத தேவை என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றேன்.

எமது பெருந் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் வழியில் சமூகத்தின் விமோசனத்தை நோக்கிய எமது பயணத்தைத் தொடர்வோமாக.  
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள விசேட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

H.M.Hafees (அமைச்சரின் ஊடகப்பிரிவு)

துறைசார் பதவி நியமனங்களுக்கான ஆட்சேர்ப்பின் போது துறைசார் பட்டதாரிகளுடன் ,துறைசார் டிப்ளோமாதாரிகளையும் உள்வாங்குமாறு இலங்கை இஸ்லாமியஆசிரியர் சங்கம்; கோரிக்கை .....(எம்.எம்.ஏ.ஸமட்)

துறைசார் பதவி நியமனங்களுக்கான ஆட்சேர்ப்பின் போது துறைசார் பட்டதாரிகளுடன் ,துறைசார் டிப்ளோமாதாரிகளையும்  உள்வாங்குமாறு இலங்கை  இஸ்லாமியஆசிரியர் சங்கம்; கோரிக்கை விடுத்துள்ளது

இது குறித்துஆசிரியர் சங்கம் விடுத்துள்ளகோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

உளவளஆலோசகர்;,உளவளஆலோசக உதவியாளர் வழிகாட்டல் மற்றும் உளவள ஆலோசனை ஆசிரியர் என்ற உளவளத்துறை சார்ந்தபதவி நியமனங்களுக்காக ஆட்சேர்பபின்;போது, உளவளத்துணைறயில் டிப்ளோமா கற்கை நெறியினைப் பூர்த்தி செய்துள்ள உளவளத்துறை டிப்ளோ மாதாரிகளையும்   உள்வாங்க வேண்டும்.

சவால்களும்  சிக்கல்களும் நிறைந்தவாழ்க்கைப் பொழுதில் மக்கள் நிம்மதிதேடி அலைகின்றனர். தொடர்ந்துவரும் வாழ்வாதார நெருக்கடிகளும் ,உயர்ந்துசெல்லும்  வாழ்க்கைச் செலவும் அதனால் உருவாகும் நெருக்கடிமிக்க வாழ்க்கைமுறைகைளும் பலரைஉளப் பாதிப்புக்குள் தள்ளிவிடுகிறது.
இதனடிப்படையில் இலங்கை மக்களிடையே குறிப்பிட்ட வீதமானோர் உளப் பிரச் சினையுடன் காணப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இன்று நாட்டில் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ளத்தில் ஏற்படும் உபாதைகள் காரணமாகஉள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வன்செயல்கள், பல்வேறு வகையிலான துஷ்பிரயோக நடவடிக்கைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் போன்ற சமூக பிரச்சினைகளுக்கும் உளப்பாதிப்புக்களும் காரணமாகவுள்ளதாகஅறியப்படுகிறது.

இதற்கு ,சுகாதார அமைச்சின்பணிப்பாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ள கருத்து ஆதாரமாக உள்ளது. உலகில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு 8 இலட்சம் எனவும், அது 40 செக்கனுக்கு ஒன்று எனவும், 2012 இல் 20-49 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பிற்கு முதன்மைக்காரணியான தற்கொலை ஐந்தாவது இடத்திலும், 15-29 வயதுக்குட்பட்டவர்களின்  மரணத்தில் அது இரண்டாவது இடத்திலும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2011 இல் 3770பேரும், 2012இல் 3524பேரும், 2013இல் 3461பேரும் தற் கொலைசெய்துகொண்டுள்ளதாகவும், இது ஒரு இலட்சம் பேருக்கு 28.5 எனவும்,  இதன் காரணமாக அதிக தற்கொலை நடக்கும் நாடுகளின் விகிதாசாரத்தில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாகவும் உலகசுகாதார ஸ்தாபனத்; தகவல்கள் தெரிவிக் கின்றன.

மாணவர்கள் மத்தியில் சமகாலத்தில் ஒழுக்கவிழுமியங்கள் குறைந்துவருகிறது. நவீனதொலைத் தொடர்புசாதனங்களின் பாவனை மாணவர் சமூகத்தில் அதிகரித்துள்ளதன் விளைவாக அவர்களின் வழிகாட்டல் முன்மாதிகளாகஅவர்கள் காணும் காட்சிகளும் காட்சிகளுடன் சம்பந்தப்பட்டவர்களும்  இருக்கிறார்களே தவிர.

ஆசிரியர்களை வழிகாட்டல் முன்மாதிரிகளாகபலமாணவர்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.  பாடசாலைகளில் இடம்பெறுகின்ற அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் தொடர்பானசிற் சில சம்பவங்கள் இவற்றை நன்கு புலப்படுத்துகின்றது.

இம்மாணவர்களின் பின்னணியை ஆராய்கின்றபோதும். அவர்களின் நடத்தைக் கோலங்களைஅவதானிக்கின்றபோதும்,அவர்களிலும் உளப்பிரச்சினைகள் காணப் படுகின்றனவாஎன்றுசந்தேகிக்கக் தோன்றுகிறது.

சிலமாணவர்களின் சில நட வடிக்கைகளின் பின்னால் உளப்பாதிப்புக்கள் கனிசமானபங்கினைசெலுத்துகிறது. இவ்வாறானநிலையில் குறித்த நபர்களுக்கும் மாணவர்களுக்கும் உளவளத் துறைசார் அறிவுபெற்றுக்கொடுக்கப்படவேண்டியதுஅவசியமாகியுள்ளது. இவ்வாறுபல்வேறுமட்டங்களில் பல்வேறு தரப்பினர்களுக்கு உளவளஆலோசனை வழங்க வேண்டிய தேவைதற் போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இவற்றைக் கருத்திற்கொண்டு சமூகசேவைகள் அமைச்சு. சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை,சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரஅ மைச்சு,கல்வி அமைச்சு என்பவற்றினால் பிரதேச செயலகங்களிலும் ,பாடசாலைகளிலும்  உளவளத் துறை சார்ந்தநியமனங்களாக உளவள ஆலோசர்களும்  உளவளஉதவியாளர் களும் வழிகாட்டல் மற்றும் உளவள ஆலோசனைஆசிரியர்களும் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநியமனங்களின் போதுபட்டதாரிகளுக்கேமு ன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால்,உளவியலுடன்  தொடர்புபட்ட  உளவியல் உளவளத் துணைகற்கை நெறியினைகனத்த கால நேரங்களையும் ,பெருத்தபணத்தொகையையும்;  செலவு செய்து திறமையாகச் சித்தியடைந்துடிப்ளோமா பட்டங்களைப் பெற்றுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுகின்றமை ஏற்புடையதல்ல.

சமூகசேவைகள் அமைச்சின் கீழ் உள்ளதேசியசமூகஅபிவிருத்திநிறுவகத் திலும்,தென்கிழக்குப் பல்லைக்கழகம் போன்ற உளவளத்துணை கற்கை நெறிக்காக அங்கீகரிக்கப்பட்ட  உயர் கல்வி நிறுவகங்களிலும் ,உளவியல் உளவளத் துறையில் டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்று நூற்றுக்கணக்கானோர் அக்கல்வி நிறுவகங்களிலிருந்து வருடந்தோறும் வெளியேறுகின்ற போதிலும் அவர்கள் குறித்தநியமனங்களின் போது உள்வாங்கப்படாது புறக்கணிக்கப்படுகின்றனர்.

இப்பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களில் கூட டிப்ளோமாகற்கை நெறியினைப்  பூர்த்தி செய்தவர்களும் விண்ணப்பிக்க கோரப்படுவதில்லை இதனால் இக்கற்கைநெறியினைப் பூர்த்திசெய்தவர்கள் அவர்களதுதுறையில் தொழில்வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்வதில் எதிர்காலமின்றிஉள்ளனர்.இந்நிலமைகளைக்  கருத்திற்கொண்டு, இலங்கையில் உளவளத்துணைக் கற்கை நெறியினைகற்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்றகற்கைநிலையங்களில்; உளவியல்  உளவளத் துணைடிப்ளோமாகற்கை நெறியினைமுறையாகக் கற்றுஅதற்கான தொழில்வாண்மை செயல்முறைப் பயிற்சியினையும், டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்று இற்றைவரை தொழில் வாய்ப்பின்றி இருக்கும் நூற்றுக்கணக்கானஉளவளத்  துணைடிப்ளோமாதாரிகளையும் உளவள ஆலோசகர் மற்றும் உளவள ஆலோசக உதவியாளர்,வழிகாட்டல் மற்றும்  உளவளஆலோசனை ஆசிரியர்கள் போன்ற பதவி நியமனங்களுக்கான ஆட்சேர்ப்பின்போது இந்த டிப்ளோமாதாரிகளையும் உள்வாங்குமாறு  இலங்கை இஸ்லாமியஆசிரியர்; சங்கம் அனுப்பிவைத்துள்ள கோரிக்கை அடங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கதாகும்.

(படங்கள் இணைப்பு) சர்வதேச அரங்குக்கு செல்லும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். கட்டார் சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீனின் புது முயற்சிகள்.


-    கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -

இலங்கை அரசியலில் புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கும் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக கடல் கடந்து வாழும் இலங்கை மக்களினை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரும் பணியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது.

குறி்ப்பாக இலங்கை அரசியலில் நீண்ட காலமாக இருந்து வருகின்ற அரசியல் ஒவ்வாமை மற்றும் தனிப்பட்ட செயற்பாடுகள் என்பன இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கட்சி ரீதியான பிளவுகளுக்கு வழி ஏற்படுத்தியதுடன்,பேரம் பேசும் சக்தியின் பலத்தினை பலவீனப்படுத்தியுள்ளதை அரசியல் நீரோட்டத்தில் காணமுடிகின்றது.

இந்த நிலையானது இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல்  சூன்யமயமாக்களுக்கு அடித்தளத்தினை ஏற்படுத்தியுள்ளதையும் அவ்வப்பொது வரலாற்றிலிருந்து காணமுடிகின்றது.

காலத்தின் தேவை மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு என்பனவற்றை கவனத்திற்கு கொண்டு கட்சி அரசியல் ஒன்றின் தேவைப்பற்றி உணரப்பட்ட வேளை ஆரம்பிக்கப்பட்டது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.இன்றைய அரசியல் போக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள கட்சிகள் மற்றும் இனவாத சித்தமாந்தங்களுக்கு முன்னுரியைமளித்து பிரிவினைக்கு வித்திடும் கட்சிகள் மற்றும் சக்திகள் என்பனவற்றுக்கு சவாலாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயற்படுகின்றது.

பிரதேச  சபை முதல் பாராளுமன்றம் வரையிலான அரசியல் உட்கட்டமைப்பு வலையமைப்பில் சரியான பதவிகளை ஏற்படுத்தி அதில் இனம்,மதம்,பேதம்,பிரதேசம் என்பன அற்ற வகையில் பிரதி நிதித்துவத்தை வகிக்க செய்துள்ளது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பதை யாவரும் அறிவர்.

இலங்கைக்குள் ஏற்படும் விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்பில் ஆழமாக அவதானிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,அதற்கு முகம் கொடுக்கும் வியூகத்தை சரியாக செய்துவருகின்றது.

எழுந்தமான பேச்சுக்கள்,மற்றும் ஆவேஷமான தீர்மானங்கள் ஒரு போதும் நீண்ட பயணத்திற்கு துயைாக இருக்காது என்பதை உணர்ந்ததால் இந்தக்கட்சி பல சவால்களை எமது சமூக மட்டத்திலும்,குறிப்பாக பெரும்பான்மை அமைப்புக்களாலும் விமர்சிக்கப்பட்டுவருவதையும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

இந்த நிலையில் கட்சியின் செயற்பாடுகள் சர்வதேச மயப்படுத்ப்படல் வேண்டும் என்ற விடயத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் கொண்டுள்ள ஆர்வம்,இந்த கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் செயற்படுவதை உறுதி செய்ய முடிகின்றது.அந்த வகையில் அகில இல     ங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனது விருட்சங்களை தற்போது சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்ல ஆரம்பித்துள்ளது.

கடல் கடந்து பணியாற்றும் இலங்கையர்கள் இவ்வாறான அமைப்பின் அவசயித்தை உணர்ந்திருக்கின்றனர்.என்பதை முகப்பு நுால்களில் (பேஸ் புக்) ஊடாக அறியமுடிந்தது.இந்த சந்தரப்பம் மக்களது சந்தரப்பம் என்பதை உணர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்  கிளைகைளை சர்வதேசத்தில் ஏற்படுத்துவது தொடர்பில் உடன்பாடுகளை எட்டினார்.

கட்டார் நாட்டுக்கு வருகைத்திருந்த கட்சியின் தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீனை தொழில் நிமிர்த்தம் தங்கியிருக்கும் இலங்கை சகோதரர்கள் சந்தித்து கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதன் அவசியத்தை விளக்கியதுடன்,முதலாவது கிளையினை கட்டாரில் ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தையும் வழஙை்கினர்.

இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேசத்திற்கான முதலாவது கட்டார் கிளைக்கான ஒப்புதலை அமைச்சர் வழங்கினார்.இதன் செயற்பாடுகள்,விரிவுபடுத்தல் என்பன முன்னெடுக்கப்படுவதற்கான கருத்தாடல்களும் இந்த சந்திப்புக்களின் போது பகிரப்பட்டது.


இந்தியாவின் ஆட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி, சுமார் 100 நாட்களின் பின் நடந்த தேர்தல்களில் படுதோல்வி.


இந்தியா:

நாடு முழுவதும் 10 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைத் தழுவியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் இந்தியாவின் ஆட்சியை கைப்பற்றிய கட்சியை மக்களுக்கு அவ்வளவு சீக்கிரம் (சுமார் 100 நாட்களில்) வெறுத்து விட்டதா என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

10 மாநிலங்களில் உள்ள 3 லோக்சபா, 33 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன.

வதோதரா (குஜராத்), மைன்புரி (உத்தரபிரதேசம்), மேடக் (தெலுங்கானா) ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 11, குஜராத்தில் 9, ராஜஸ்தானில் 4, மேற்கு வங்காளத்தில் 2, வடகிழக்கு மாநிலங்களில் 5, ஆந்திரா மற்றும் சத்தீஸ்கரில் தலா ஒன்று என 33 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 13ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இத்தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. ஆனாலும் வாக்குப் பதிவு என்பது மிகவும் குறைவாகவே பதிவானது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

உத்தரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 11 தொகுதிகளில் 2-ல் தான் முன்னிலை வகிக்கிறது. 4 தொகுதிகளில் சமாஜ்வாடி கைப்பற்றிவிட்டது. 5-ல் சமாஜ்வாடி முன்னிலை வகிக்கிறது.

லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் 70 தொகுதிகளை அள்ளிய பாரதிய ஜனதா தற்போது படுதோல்வியைத் தழுவியுள்ளது.

இதேபோல் ராஜஸ்தானில் பாஜக வசம் இருந்த 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 3 ஐ காங்கிரஸிடம் பறிகொடுத்து படுதோல்வியை சந்தித்துள்ளது பாஜக.

குஜராத் மாநிலத்தில் 9 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 7ஐ பாஜக கைப்பற்றியுள்ளது. 2-ல் காங்கிரஸ் வென்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா ஒரு தொகுதியைக் கைப்பற்றி முதல் முறையாக அம்மாநில சட்டசபைக்குள் நுழைந்துள்ளது.

செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா)
செப்படம்பர் 16,
இது
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சூரியனாய் பிரகாசித்து திடீரென ஒரு மாலைப்பொழுதில் நிரந்தரமாய் மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்இறையடியெய்திய தினம்.

இதனையொட்டிய ஒரு சிறப்புக் கவிதை ....


வரலாற்றுச் சரித்திரம்


வாழ்வின் நெருக்குதல்களும்
மனித அவலங்களும்
தலை விரித்தாடிய பொழுதுகளில்
எதேர்ச்சையாக
கீழ் வானத்து வானவில்லாய் முளைத்த
அஷ்ரப் எனும் ஒளிச்சுடர்
பலநுாறு யுகங்களின் இருள்களைக்
குத்திக் குடையும் வல்லமையுள்ளது

முஸ்லிம் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழவும்
அரசியல் சமூகவியலில்
புது வீச்சம் காணவும்
அஷ்ர.ப் ஆற்றிய பணிகளக்குப் பிறகு
இன்னும் இடைவெளிகள்தான்
கனத்துக் கிடக்கின்றன....

இனமதக் குரோதங்களுக்கப்பால்
நமது இருப்பும் ஜிவிதமும் மேலோங்க
நமக்காகவே உழைத்தவர் அவர்!

நம் யுகம் சந்தித்த
மிகப்பெரும் அதிசயம் அஷ்ரப்!

அவரது வாழ்வும் பணியும்
முகர்ந்து விட்டு துாக்கியெறியும்
மலரைப் போன்றதல்ல
அது
சாமர்த்தியங்களும் சாதனைகளும் நிறைந்த
மிகக் கனதியான வரலாற்றுச் சரித்திரம்!

சமுதாயத்திற்காகவே
ஆயுளை அர்ப்பணித்த அவர்
சுவனத்து நறுமணங்களில் குதூகலிக்கட்டும்
இந்த அவலங்களைச் செவிமடுக்காது
தன் காதுகளை மூடியபடி....

ஆனால்
தளபதியே அஷ்ரப்
நீ மரணித்துவிட்டாய் உன்னைத்தவிர!
                            - பாலமுனை முஹா

SLMC உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஏற்பாடு செய்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தின சிறப்பு நிகழ்ச்சிகள்....

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், சவூதி தூதுவராலய பொதுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் ஏற்பாடு செய்த கத்தமுல் குர்ஆன் வைபவமும், துஆப் பிரார்த்தனையும் சம்மாந்துறையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை மாநகர உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவருமான ஏ.எம்.அப்துல் மஜீட் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை தப்லீஹூல் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் ஏ.சீ.ஏ.எம்.புஹாரி (மௌலவி), சம்மாந்துறை உலமா கங்கிரஸ் உறுப்பினர்கள், உலமாக்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த போரளிகள், பொதுமக்கள், புத்திஜீவிகள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

திகாரிய ஹசனியா ஆண்கள் அரபுக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை....திகாரிய ஹசனியா ஆண்கள் அரபுக் கல்லூரியில் புதிய கல்வி ஆண்டிற்கு ஹிப்ழு மற்றும் கிதாபுப் பிரிவுக்கு புதிய மாணவர்களை  சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும்  27 ஆம் திகதி சனிக்கிழமை காலை  9 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளது. 

தகைமைகள் : 

கிதாபுப் பிரிவு  
தரம்  9 இல் சித்தியடைந்தவராகவும் 
குர் ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும்  
சன்மார்க்க கல்வியில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். 

ஹிப்ழுப் பிரிவு  
11 அல்லது 12 வயதுடையவர்களாகவும் 
குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும் 
சன்மார்க்க கல்வியில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். 
 
மேற்படி தகைமை உடையவர்கள் முன்கூட்டியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்தல் வேண்டும். தொலைபேசி இலக்கங்கள் : 07768309230718189400. க .பொ.த. சாதாரண , உயர்தரம் மற்றும் அல் ஆலிம் பரீட்சைகளுக்கு இம் மாணவர்கள் தயார்படுத்தப்படுவர். அத்துடன் இவர்கள் நிரந்தர நோயற்றவராக இருத்தல்  அவசியம்.

கல்முனை தொகுதியெங்கும்ட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் தலைவர் தினம் நிகழ்வு


திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (16) கல்முனை தொகுதியெங்கும் தலைவர் தினம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவுப் பேருரையும் துஆ பிரார்த்தனையும் இடைம்பெற்று வருகின்றது.

தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை கற்ற கல்முனை அஷ்ஷுஹரா வித்தியாயத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தலைவர் பற்றிய சிறப்புரையினை கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

களகெதர பெத்திகேவல நடு வீதியில் மழை நீர் சேகரிப்பு திட்டம்....(படங்கள்)

கண்டி குருநாகல் பிரதான வீதியின் ஊடாக ரம்புக்கன்ன செல்லும் பிரதான வீதியில்  களகெதர  பெத்திகேவல  வீதி கடந்த காலங்களில் புணரமைக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாதையூடக சுமார் 900 பிள்ளைகள கல்வி பயிலும் ஜப்பார் நவோத்யா பாடசாலை செல்லும் மாணவர்கள் மழைக்காலங்களில் குறித்த பதையூடாக செல்வதில் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள சிறுகிராம வீதிகளும் அபிவிருத்தி செய்ய்படும் இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பாதையை  பிரதேச அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்துக்குறது...

இந்த செய்தி அவர்களுக்கு செல்லும் பட்சத்தில் குறித்த பாதை அபிவிருத்தி தொடர்பாக பிரதேச அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவார்களா?இப்படியும் ஒரு பிரதமர்.


முள்ளிப்பொத்தானை ஜபருல்லாஹ் 

பலரும் பல நல்ல தீய திட்டங்களை ரூம் போட்டு யோசிப்பதாகத்தான் நாம் கேள்விப் பட்டிருப்போம்.ஆனால் அதற்கு மாறாக மக்கள் குறை கேட்டு நிவர்த்தி செய்ய ஒரு நாட்டின் பிரதமர் குடிசை போட்டு அந்த ஊரிலேயே தங்கி இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
என்ன நம்ப முடியவில்லையா?

எப்படி நம்பலாம் நம் நாட்டு அரசியல் தலைமைகள் தேர்தல் காலத்தில் கூட ஒரு ஊருக்கு செல்வதாயின் பூரண பாதுகாப்பும் சகல வசதியுடன் கூடிய சொகுசான இருப்பிடனகளும் தேவைப்படும்.இப்படிப் பழக்கப் பட்ட நமக்கு இதை எப்படியுமே நம்ப முடியாதுதான்.

நான் உண்மையை சொல்கிறேன் நம்பினால் நம்புங்கள். அதுதான் அவுஸ்திரேலிய  பிரதமர் டோனி அபோட், நுலுன்பை என்ற பழங்குடியின கிராமத்தில் தனது தலைமை அலுவலகத்தை விட்டுவிட்டு ஒரு வார காலத்துக்கு குடிசைப் போட்டு தங்கியுள்ளார்.

இக்கிராமம் டார்வின் நகரில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

இக்கிராமத்தில் உள்ள மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு தனது அலுவலகத்தில் இருந்த சகல விதமான தொடர்புச்சாதனங்களையும் ஏற்றிக் கொண்டு குறித்த கிராமத்திற்கு விமானம் மூலம் சென்ற பிரதமர் டோனி அபோட்டை, அங்குள்ள மக்களும் அதிகாரிகளும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தான் கடந்த வருடம், தேர்தலின் போது அந்த மக்களிடம் அளித்த தேர்தல் வாக்குறுதியாக, ஒருவாரம் அந்த பழங்குடியினரோடு தங்கி இருந்து அவர்களின் குறைகளை கண்டறிந்து தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.அன்று  வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்றுவதற்காகவே இன்று வந்துள்ளதாக பிரதமர் டோனி அபோட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஊரை அடித்து உலையில் போடும் நம் அரசியல் தலைமகள் மத்தியில் இவர் எம்மாத்திரம். நம்மவர்கள் இவரிடம் டியூஷன் எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

(படங்கள் இணைப்பு) தம்புள்ளை பள்ளிவாயல் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் ....CC TVஆதாரம் இதோ.படகுகளுக்கு கடத்தல்காரர்கள் தாக்குதல்? சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடானை சேர்ந்தவர்கள் 500 பேர் பலி.


எகிப்தில் இருந்து படகு வழியாக இடம் பெயர்ந்து சென்ற 500 பேர் மத்திய தரை கடல் பகுதியில் கடத்தல்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியதில் நீரில் மூழ்கி இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து சர்வதேச இடம் பெயர்வு அமைப்பான (ஐ.ஓ.எம்.) இன்று கூறுகையில், எகிப்து நாட்டின் டாமியேட்டா நகரில் இருந்து கடந்த செப்டம்பர் 6ந்தேதி பலர் இடம் பெயர்ந்து வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு புறப்பட்டனர்.  அவர்களில் சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இருந்தனர்.

கடத்தல்காரர்கள்

அவர்கள் சென்ற படகு ஐரோப்பா பகுதியை கடந்து சென்றபோது கடத்தல்காரர்கள் சிலரால் வழிமறிக்கப்பட்டு உள்ளது.  மற்றொரு படகில் வந்த அந்த கடத்தல்காரர்கள், படகில் இருந்தவர்களை வேறொரு சிறிய படகிற்கு மாறும்படி கூறியுள்ளனர்.  படகு சிறியதாக இருந்ததால் அது தங்களுக்கு ஏற்றதாக இருக்காது என்று கருதி புதிய படகிற்கு மாற இடம் பெயர்ந்தோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமுற்ற கடத்தல்காரர்கள் அவர்கள் வந்த படகினை திரும்ப திரும்ப மோதி அதனை மூழ்கடித்துள்ளனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலிய போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.  மால்டா பகுதியில் மூழ்கிய படகில் இருந்து தப்பித்த இரு பாலஸ்தீனியர்கள் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி, படகில் 500 பேர் இருந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

நேற்று தம்புள்ள பள்ளியருகில் "பட்டாசு வீசி" அச்சுறுத்தல்? விஷமிகளின் திட்டமிட்ட செயலென அஸ்வர் எம்.பி கண்டனம்.தம்புள்ள பள்ளியருகில் "பட்டாசு வீசி" அச்சுறுத்தல்?


விஷமிகளின் திட்டமிட்ட செயலென அஸ்வர் எம்.பி கண்டனம்

தம்புள்ள பள்ளிவாசலுக்கு அருகில் சில விஷமிகள் 'பட்டாசுகளை வெடிக்கச்' செய்த சம்பவத்தை ஊடக மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் வன்மையாக கண்டித்துள்ளதாக இன்றைய தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று வெடித்தது பெற்றோல் மற்றும் கைக்குண்டு என பள்ளிவாயல் தரப்பால் மற்றும் அசாத்சாலி, முஜிபுர்ரஹ்மான் போன்றோரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் பட்டாசுகளை வெடிக்கச்' செய்த சம்பவம் என செய்தி வெளியாகி உள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது...

ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அங்கு வாழும் முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டுமென்னும் ஒரே நோக்கிற்காக இது விஷமிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையெனவும் அவர் உறுதியாக கூறினார்.

புலனாய்வுத் துறையினர் மேற்படி கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும் விஷமத்தனத்திற்கு காரணமானவர்களை கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடு க்கப்பட வேண்டுமென தான் அரச தலைவர்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் அஸ்வர் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
ஊவா மாகாணத்தின் தேர்தல் கள நிலவரங்களை மேற்பார்வை செய்வதற்காக அப்பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டுள்ள அஸ்வர் எம்.பி மொனராகலையிலிருந்து இத் தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார். அஸ்வர் எம்.பி, ஊவா மாகாணத்தின் அனைத்து பகுதியிலும் வாழும் முஸ்லிம்களை சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் இச்சம்பவம் குறித்து கலக்கமடையவோ, அலட்டிக் கொள்ள வோயில்லை எனவும் கூறினார்.

இது விஷமிகளின் செயலென்பதை எமது மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் காக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் அஸ்வர் எம்.பி. தினகரனுக்கு தெரிவித்தார்.  

Lake House

சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டு கழகத்தினருக்கு கடின பந்து விளையாட்டு உபகரனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு....


(அகமட் எஸ். முகைடீன்)
சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி விளையாட்டு அங்கி மற்றும் கடின பந்து விளையாட்டு உபகரனங்கள் என்பன கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் வழங்கிவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிஸ்மில்லா ஹோட்டலில் நடபெற்றது.

சென்றல் கேம்ப் அல்-ஹிரா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜி.எம்.எம்.பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஏ.கரீம், சிங்கர் சோறூம் தலைவர் எஸ்.எச்.ஜிப்ரி, சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் என்.பி.எம்.ரஜாய், றிஸ்வி மோடோர் உருமையாளர் யு.எல்.றிஸ்வி மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் சிராஸ் மீராசாஹிப்புக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர். 
இரு மொழிகளால் இதயபூர்வமாக ஒன்றிணைந்த ஒரே இலங்கை தேசம் என்று கூறிக் கொண்டு, சட்டக்கல்லூரி வினாத்தாளை சர்வதேச மொழிக்கு மாற்றுவது நியாயமா?


(எஸ்.அஷ்ரப்கான்)

இரு மொழிகளால் இதயபூர்வமாக ஒன்றிணைந்த ஒரே இலங்கை தேசம் என்று கூறிக் கொண்டு, சட்டக்கல்லூரி வினாத்தாளை சர்வதேச மொழிக்கு மாற்றுவது நியாயமா? என்று இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது விடயமாக சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ், தேசிய பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம். சலீம் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதுவரைகாலமும் சட்டக்கல்லூரியில் நடாத்தப்பட்ட சகல பரீட்சைகளின் போதும் மும்மொழிகளிலும் வழங்கப்பட்டுவந்த வினாத்தாள்கள் தற்போது சர்வதேச மொழி யான ஆங்கில மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதனை சட்டத்துறை தாய்மொழிக்குச் செய்யும் துரோகமாகவே சங்கம் கருதுகின்றது. தாய் நாட்டை, தாய்மொழியை நேசிக்கின்ற எந்த ஒரு மகனும் இதனை ஏற்க மாட்டான்.

தமிழ்,சிங்களம் என்பவற்றை சுதேச(தாய்) மொழிகளாகவும், ஆங்கிலத்தை சர்வதேச (இணைப்பு) மொழியாகவும் பிரகடணம் செய்துள்ள அரசு, சகல பிரசைகளும் அரச நிறுவனங்களுக்குள் சிங்களத்தில் அல்லது தமிழில் தமது சேவைகளை நிறை வேற்றிக் கொள்வதற்கு சட்டபூர்வமான உரிமையுண்டு என்றுகூறி, இந்த மொழி களின் அமுலாக்கத்திற்காக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சொன்றையும் உருவாக்கி, அதற்கு அனுபவமும் தேர்ச்சியுமிக்க அமைச்சர் ஒருவரையும் நியமித்து, அதற்கு மேலதிகமாக அரச கரும மொழிகள் ஆணைக்குழு வொன்றையும் தாபித்து, செயற்படுத்தி வருகின்ற நிலையில் தாய் மொழிக்கு சட்டக் கல்லூரியில் இடம் இல்லாமல் போவதை எவராலும் ஏற்க முடியாது.
இதற்கு மேலதிகமாக சகல அரசதுறை ஊழியர்களும், தமிழ்மொழி ஊழியர்கள் சிங்களத்தையும், சிங்கள மொழி ஊழியர்கள் தமிழையும், ஆங்கில மொழி ஊழி யர்கள் தமிழையும், சிங்களத்தையும் இரண்டாம் மொழியாகக் கற்க வேண்டும் என்ற சட்டத்தையும் கட்டாயமாக்கியுள்ள நிலையில், சட்டத்துறை ஆங்கிலத்தை பரீட்சை மொழியாக்குவதை எவ்வாறு ஏற்க முடியும்.

இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது உறுப்புரையின் முதலாவது பந்தியின்படி இலங்கையின் அரச கரும மொழி சிங்களமாகும். 13ஆவது அரசிலமைப்பு திருத் தத்தின் பின்னர், இரண்டாவது பந்தியின்படி தமிழ் மொழியும் அரச கரும மொழி யாகும், மூன்றாவது பந்தியின்படி ஆங்கில மொழி இணைப்பு மொழியாகும். நான் காம் பந்தின்படி (இவ்வத்தியாயத்தின் பிரிவு ஐஏ இன் ஏற்பாடுகளுக்கமைய) அரச கருமமொழிகளை அமுலாக்குவதற்கு 1651ஃ20ஆம்இலக்க வர்த்த்தமானி அறிவித்தல் மூலம் தாபிக்கப்பட்ட தேசியமொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும், 1991ஃ18ஆம்இலக்கச் சட்டத்தின்மூலம் தபிக்கப்பட்ட அரச கருமமொழிகள் ஆணைக் குழுவும் செயற்படுகிறது.


இலங்கை அரசியலமைப்பின் 24ஆவது உறுப்புரையின்படி சிங்களமும், தமிழும் நீதிமன்றங்களின் மொழிகளாக இலங்கை எங்கிலும் இருத்தல் வேண்டும். அரசியல மைப்புச் சட்டங்கள் இவ்வாறிருக்க, சட்டக் கல்லூரி மட்டும் எவ்வாறு பரீட்சை வினாத்தாளை ஆங்கில மொழியில் மட்டும் வழங்க முடியும். முன்பிருந்தபடி மும் மொழி அமுலாக்கத்திற்கு அமைச்சும், ஆணைக்குழுவும் ஆவன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.(

ஜனாதிபதி சவால் கிண்ண மென்பந்து சுற்றுப்போட்டி முடிவுகள்.


Ahamed lebbe junaideen

ஜனாதிபதி சவால் கிண்ண மென்பந்து சுற்றுப்போட்டியின் வாழைச்சேனை கோட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு இன்று ஓட்டமாவடி அமீரலி மைதானத்தில் இடம்பெற்றது.

இச்சுற்றுப்போட்டியில் கோரளைப்பற்று வாழைச்சேனை, கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அணிகள் கலந்து கொண்டன. அணிக்கு அறுவர் கொண்ட ஐந்து ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் 25 கழகங்கள் கலந்து கொண்டன.

கிழக்கு அபிவிருத்தி மன்றத்தின் மட்டக்களப்பு அமைப்பாளர் ஜுனைட் நளீமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மக நெகும தலைவர் கிங்க்சி ரணவக்க, 23வது படையணியின் கட்டளையதிகாரி பிரிகேடியர் அதுல கொடுப்பிலி , ஏறாவூர் நரசபை முதல்வர் அலிசாகிர் மௌலான, இளைஞ்ச்சர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் கே. தவராசா, உள்ளிட்ட அரச அதிகாரிகள், மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கோரளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் கல்குடா வேலாங்க்கனி கழகமும், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் டொப் ரேங் கழகமும் , கோரளைப்பற்று மத்தி செயலகப்பிரிவில் டோன் டச் கழகமும்  முதலிடங்களை தனதாக்கி கிண்ணங்களை சுவீகரித்துக்கொண்டன.

கோரளைப்பற்று மத்தி செயலகப்பிரிவின் இறுதிப்போட்டிகள் பகல் இரவு மின்னொளிப் போட்டியாக இடம்பெற்றமை இப்பிரதேச வரலாற்றின் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

நெல் விலை அதிகரிப்பை கட்டுப் படுத்த கூக் குரல் இடுவது நியாயமா??

நெல் விலை அதிகரிப்பை கட்டுப் படுத்த கூக் குரல் இடுவது நியாயமா??
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
அம்பாறை மாவட்டத்தில் என்றும் இல்லாதது போன்று நெல் விலையானது  யானை குதிரை விலை போய்க் கொண்டிருக்கிறது.இதனை கட்டுப் படுத்த அ.இ.அ.பொ.ஊ  ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளதாம்.நெல் விலையின் இவ் அதிகரிப்பிற்கு இம் முறை நீர்ப் பற்றாக் குறையால் பல ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்ய செய்யத் தடை விதிக்கப் படமையே பிரதான காரணம் எனலாம்.நெல் விலை அதிகரிப்பை மக்களுக்கு சுமையாக பார்க்கிறீர்களே!யாராவது அந்த விவசாயிகளை சற்றேனும் சிந்தித்து பார்த்தீர்களா??

விவசாயத்தையே வாழ் வாதாரமாக கொண்டு வாழும் இம் மக்களிடம்,நீர் இல்லை நீங்கள் விவசாயம் செய்ய வேண்டாம் என்றால்,தங்கள் வாழ்கையை இவர்களால் எங்கனம் கொண்டு இயலும்..??இவர்களிற்காக யார் குரல் கொடுக்குகிறார்கள் ..??அரசாங்கத்தால் இவர்களிற்கு வழங்கப் படும் தீர்வுதான் என்ன??
மிஞ்சி மிஞ்சி போனால் விதை நெல்லை வழங்குவார்கள்.இதன் பிரதிபலனை நான்கு மாதங்களின் பின்பே அவர்களால் பெற்றுக் கொள்ள இயலும்.அவர்களிற்கான உடனடித் தீர்வு பற்றி யாருமே சிந்திப்பதில்லை.
உண்மையில்  அரிசியின் விலை அதிகரிப்பை சற்று சகித்துக் கொண்டு எம் சமூகம் செல்லுமாக இருந்தால் அது பாதிக்கப்பட்டுள்ள அவ் விவசாயிகளுக்கு மிகப் பெரிய உதவியாக அமையும்.
நாங்கள் ஏன் சகிக்க  வேண்டும் என கேட்கலாம்..??உதாரணமாக,சம்பள உயர்விற்காக அரசாங்க ஊழியர்கள் போர்க் கொடி தூக்கினால்.அரசாங்கம் அவர்களினது சம்பள அதிகரிப்பிற்கு பொருட்கள் மீதான வரியை கூட்டி,அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சம்பள அதிகரிப்பிற்கு பயன்படுத்தும்.இது நாட்டில் உள்ள அனைவரையும் பாதிக்கும்.அரசாங்க ஊழியர்களினது சம்பள அதிகரிப்பிற்கு  நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பங்கெடுப்பார்கள் என்றால் ஏன் விவசாயிகளிற்காய் இவ் விடயத்தில் நாட்டு மக்களால் இம் முறை பங்கெடுக்க முடியாது..??
மேலும்,அரிசியின் விலையை பொறுத்த மட்டில் நாட்டில் நிர்ணயிக்கப் பட்ட விலையிலேயே விற்க முடியும்.இவ் அதிகரிப்பினால் சாதாரண பொது மக்கள் பாதிக்கப் பட்டதை விட அரிசி ஆலை பணக்கார வர்க்க முதலாளிமார்களே அதிகம்  பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.வசதி படைத்தோர் பாதிக்கப் பட்டால் குரல் கொடுக்க பலரும் விளைவது சாதாரணமானது தான்.

இன்னுமொரு விடயத்தையும் நாம் பார்க்க வேண்டும்.அரிசியிற்கு நிர்ணயிக்கப் பட்ட விலை இருப்பது போல் நெல்லிற்கும் நிர்ணயிக்கப் பட்ட விலை உள்ளது.ஆனால் அது அரசாங்க நெல் கொள்வனவு செய்யும் இடங்களில் மாத்திரமே.இது என்ன நியாயம்??நெல்லிற்கு அரசாங்க இடத்தில் மாத்திரம் குறிக்கப் விலை,ஆனால் அறிசியிற்கோ எங்கும் குறிக்கப்பட்ட விலை.

அரசாங்க நெல் கொள்வனவு செய்யும் இடங்களில் விவசாயிகள் நெல் விற்பனையின் போது அனுபவிற்கும் இடர்பாடுகளும்,மிகைத்த செலவு தானங்களை  வைத்துப் பார்த்து குறைந்த விலையில் தனியார்களிற்கே விற்று விடுவார்கள்.மேலும்,ஒரு விவிசாயி குறித்தளவு நெல்களை மாத்திரமே அங்கே விற்க முடியும்.அவர்களது ஏனைய நெல்களை அரசு என்ன செய்யச் சொல்லுகிறது??

விவசாயிகள் நெல்லை அரசாங்க நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலையிலே அதிகம் விற்பனை செய்வார்கள்.இதனை நாம் சாதாரணமாகவே எமது ஊர்களில் பார்வையிடலாம்.இதை கேட்க ஆளில்லை.இதன் போது அதிக இலாபத்தை சற்றேனும் மனச் சாட்சி இன்றி அரிசி ஆலை முதலாளிமார்கள் அடைந்து கொள்வார்கள்.

இம் முறை விலை அதிகரித்தால் கூக் குரல் இடுவது நியாயமா??

(படங்கள்) ரூபா 6 இலட்சம் நிதியில் ஒலுவில் பிரதேச மீனவர்களுக்கு உபகரணங்கள்.


(பி. முஹாஜிரீன்)

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட ரூபா 6 இலட்சம் நிதியில் ஒலுவில் பிரதேச மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (15) ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் இணைப்புச் செயலாளர் ஐ.எல். ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும் உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், அட்டாளச்சேனை பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா (நபீல்),

பிரதேச சபை உறுப்பினர் யாசீர் ஐமன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, அம்பாறை மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் எஸ். செல்வராஜா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஒலுவில் நடுத்துறை மீனவர்களுக்கு வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும், விளையாட்டுக் கழகங்களுக்கு கடின பந்த உபகரணத் தொகுதியும் வழங்கி வைக்கப்பட்டன.கல்முனை மாநகர சபைக்கு பிரதேசவாசிகளின் வேண்டுகோள்.


(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது ஜமாஹிரியா வீதி, ஒராபிபாஷா வீதி, காரியப்பர் வீதி ஆகிய வீதிகளின் கரையோரத்தை அண்டிய பிரதேசங்களிலும் கடற்கரை வீதியிலும் இரவு வேளையில் மின் விளக்குகள் அடிக்கடி எரியாமல்  உள்ளதனால் பிரதேசவாசிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

சாயந்தமருது கரையோரப் பிரதேச மக்கள் கடற்றொழிலை பிரதான தொழிலாக செய்து வரும் நிலையில் இரவு வேளைகளில் துார இடங்களிலிருந்து கடற்கரைக்கு வருகை தருகின்றபோது இருள் சூழ்ந்து காணப்படுவதால் கடற்றொழிலாளர்களும் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

அன்றாடத் தேவைகள் நிமிர்த்தம் அயல் கிராமங்களான பாண்டிருப்பு, காரைதீவு பிரதேங்களிலுள்ள தமிழ் சகோதரர்களும் இந்த கடற்கரை வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்தி வருகின்றனர். மேற்குறித்த இரு ஊர்களுக்குமான இலகு போக்குவரத்து ஊடகமான கடற்கரை வீதியில் இவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய  நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

மின் விளக்குகள் எரியாமல் இருப்பதனால் இரவு வேளைகளில் நாய்கள், விச ஜந்துக்களின் நடமாட்டமும் இப்பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது. மட்டுமல்லாது திருடர்களின் தொல்லை, போதைவஸ்துக்கள் பாவனையும் இப்பிரதேசத்தில் அதிகமாக இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, குறித்த பிரதேசத்தின் மின் விளக்குகளை தொடர்ச்சியாக ஒளிரச் செய்யவேண்டிய பொறுப்பு கல்முனை மாநகர சபைக்கு உண்டு. இதுவிடயத்தில் கல்முனை மாநகர முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

உலக முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்காக துணிந்து குரல் கொடுக்க.. கட்டார் அமீர் மற்றும் துருக்கி ஜனாதிபதி கலந்துரையாடல்.


Safwan Basheer

கட்டார் அமீர் மற்றும் துருக்கி ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று டோகாவில் இடம்பெற்றது.

கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்தும்விதமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சிரியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்தும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காஸாவை மீளக்கட்டி எழுப்புவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கட்டார் செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்காக துணிந்து குரல் கொடுக்கும் துருக்கி,மற்றும் கட்டார் ஆகிய நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு உலக முஸ்லிம்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கட்டாரில் இருந்து
வெளியாகும் இணையத்தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது  


Share It

சமீபத்திய செய்திகள்...